Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படத்தில் வரும் காட்சியை காப்பியடித்த பிரபல சீரியல்.. கலாய்த்த ரசிகர்கள்

sathya serial trolls fans

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் சத்யா. மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் இந்த சத்யா சீரியல் பெங்காலி மொழியில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சிந்தூர பிந்து’என்ற சீரியலின் மறுஆக்கம் தான்.

இந்தத் தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் மக்களின் பேவரைட் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்த பின்னால் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக சத்யாவின் பாகம் இரண்டாவது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் சமீபத்தில் வெளியான எபிசோடுகளில் படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே காப்பியடித்து உள்ளனர். அதாவது முதலில் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் காட்சி வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பாவில் வரும் சூப்பர் ஹிட் சீனை அப்படியே காப்பியடித்து உள்ளனர். இதனை சில ரசிகர்கள் மீம்ஸ் போட்டு பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.