தமிழ் சினிமாவில் மாபெரும் காமெடி நட்சத்திரமான இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள படம்தான் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் வடிவேலுக்கு மகளாக சிவாங்கி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிவாங்கி ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படக்குழுவினரோடு சேர்ந்து மைசூர் சென்றிருக்கிறார். அப்போது விமான நிலையத்திலிருந்து சிவாங்கி சக நடிகர்களோடு இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் சமூக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
