தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் தான் புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன். இதுபோன்ற வித்தியாசமான படங்களை எடுத்து தனக்கென தனி ஸ்டைலை ரசிகர்களின் மத்தியில் உருவாக்கிக்கொண்டார்.
மேலும் இவர் இயக்கியுள்ள படங்களில் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காது இருக்கும் படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவர் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் சாணி காகிதம் என்ற படங்களில் நடித்த செல்வராகவன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதையடுத்து இவர் எப்பொழுதுமே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை மட்டுமே அவ்வப்போது ட்வீட் செய்து கொண்டிருப்பார். ஆனால் தற்போது பின்னணி பாடகர்களான சித் ஸ்ரீராம், தீ மற்றும் ஸ்வேதா மோகன். இவர்கள் பாடும் பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தனது பிளே லிஸ்டில் இவர்களின் பாடல்கள் தான் அதிகமாக உள்ளது என்று டுவிட் செய்திருக்கிறார்.
The voices which melt me and are in all my playlists are @sidsriram @talktodhee @_ShwetaMohan_
— selvaraghavan (@selvaraghavan) June 16, 2022