Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணன் வீட்டிற்கு வந்த போலீஸ்.. கடுப்பான சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனா சொன்ன வார்த்தைகளால் சந்தியா அப்செட்டில் இருக்க கொஞ்ச நேரத்தில் வந்த சிவகாமி அவருக்கு அறிவுரை வழங்குவது போல போலீஸ் கனவு வேண்டாம் என ஜாடைமாடையாக எடுத்துச் சொல்கிறார்.

பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது சரவணன் டீ குடிக்க வீட்டுக்கு வருகிறார். இந்த நேரத்தில் போலீசார் வீட்டிற்கு வர சந்தியா அதிர்ச்சி அடைகிறார். வீட்டுக்கு வந்த அவர்கள் தீவிரவாதிகள் செய்த வேலையும் சந்தியா செய்த உதவி குறித்து பேசுகின்றனர். சந்தியா செய்த இந்த மிகப்பெரிய செயலுக்கு அவரை பாராட்ட எங்களது டிபார்ட்மென்ட் முடிவு செய்துள்ளது.

சரவணன் சந்தியா என இருவரும் கண்டிப்பாக இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். இந்த விஷயத்தைக் கேட்டதும் சிவகாமியின் இடம் மாறுகிறது சந்தியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்க சரவணன் கண்டிப்பாக நான் கூட்டி வருகிறேன் என வாக்கு கொடுக்கிறார்.

பிறகு போலீசார் கிளம்பியதும் சரவணனின் அப்பா ஸ்வீட் செய்யுங்கள் இதை கொண்டாட வேண்டும் என சொல்ல சிவகாமி கடுப்போடு உள்ளே சென்று விடுகிறார்.

இந்தப் பக்கம் மத்திய சிறைச்சாலையில் விக்கி வலம் வந்து கொண்டிருக்க அப்போது பலமுறை செல்வத்தை பார்க்கிறார். ஆனால் செல்வம் யாரையும் கண்டுக்காமல் ஏதோ யோசனையில் இருக்க அதன் பிறகு செல்வத்தை அழைத்துப் பேசுகிறார் விக்கி. இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு இருவருக்கும் ஒரே எதிரி சந்தியா தான் என பேசுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update