Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தின ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட “96” திரைப்படம்

96-movie-re-released-on-valentines-day-special update

பிப்ரவரி 14ம் தேதி (இன்று) ‘காதலர் தினம்’. உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள், தம்பதிகள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்களும் காதலர் தினத்தில் தங்களது காதல் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு காதலர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் விஜய்சேதுபதி -த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் காதலர் தினத்துக்குக்காக இன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.”,

96-movie-re-released-on-valentines-day-special update
96-movie-re-released-on-valentines-day-special update