தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் தொடங்கிய ஏழு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வாரத்தை தவிர்த்து மற்ற ஆறு வாரங்களில் ஆறு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, குயின்ஷி, கதிரவன், ஜனனி, மைனா நந்தினி மற்றும் ரக்ஷிதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி குயின்ஷி மிகக்குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்திலும் அவருக்கு முந்தைய இடத்தில் தனலட்சுமி இருப்பதாக தெரியவந்துள்ளது. மற்றவர்களை காட்டிலும் கதிரவன் அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற குயின்ஷி அல்லது தனலட்சுமிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

7th Elimination Analysis of BB 6 tamil