7-south-indian-films-expected
தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:1. கல்கி 2898 ஏ.டி. – பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம்.
பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.2. புஷ்பா 2, தி ரூல் – அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.3. காந்தாரா, சேப்டர் 1 – காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.4. தேவரா பாகம் 1 – ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.5. கேம் சேஞ்சர் – முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்
.6. இந்தியன் 2 – 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.7. கங்குவா – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.”,
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja