Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

7 நாளில் விக்ரம் படத்தின் வசூல்.. சூப்பர் ஹிட் லேட்டஸ்ட் தகவல்

7-days-collection-of-vikram

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பஹத் பாசில் மற்றும் நடிகர் சூர்யா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் விக்ரம்.

நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வசூலிலும் உலகம் முழுவதும் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் 7 நாள் முடிவில் இப்படம் ரூபாய் 260 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் இரண்டு வாரத்திற்குள் படம் 300 கோடி வசூலை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக விக்ரம் அமைந்துள்ளது என்று கூட சொல்லலாம்.

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் என உள்ளிட்ட கிப்ட்களை கமல்ஹாசன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7-days-collection-of-vikram
7-days-collection-of-vikram