தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் பீஸ்ட் படத்தை காட்டிலும் இந்த படத்தோடு வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படத்தை பார்க்கவே பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆறு நாள் முடிவில் வீற்று திரைப்படம் உலகம் முழுவதும் 140 கோடி வசூலை தாண்டியுள்ளது. முதல் நாளில் இருந்து ஆறாவது நாள் வரை ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த ரிப்போர்ட் இதோ.
Day 1 – ₹ 72.67 cr
Day 2 – ₹ 24.18 cr
Day 3 – ₹ 18.54 cr
Day 4 – ₹ 12.75 cr
Day 5 – ₹ 9.20 cr
Day 6 – ₹ 3.63 cr
Total – ₹ 140.97 cr
