5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் வேலை இழந்து வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன.

அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர், வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை ஆர் எஸ் எஸ் எஸ் இந்நிறுவனத்தின் திரைப்படதயாரிப்பாளரும் தொழிலதிபருமான எஸ் தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்துள்ளார்.

வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ் தணிகைவேல் சார்பில் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Producer Thanigaivel
Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

5 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

6 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

6 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

6 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

7 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

7 hours ago