தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பும் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வலிமை திரைப்படம்.
வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஐந்து நாள் முடிவில் இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 158 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இதுவரை மொத்தமாக 60,127 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் Gross தொகை ரூபாய் 4.85 கோடி என தெரிய வந்துள்ளது.
தற்போதும் பல திரையரங்குகளில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
