Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான்கு நாளில் உலகம் முழுவதும் தி லெஜெண்ட் படத்தின் வசூல் ரிப்போர்ட்

4days-collection-of-the-legend

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் விளம்பர படங்களில் நடித்ததை தொடர்ந்து ஜேடி ஜெர்ரி அவர்களின் இயக்கத்தில் உருவான தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது. முதல் நாளில் மட்டுமே இந்த படம் 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தால் சரவணன் முதல் முறையாக நடித்துள்ள படமென்பதால் அவருடைய நடிப்பை பார்க்க பலரும் திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த படம் நான்கு நாள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் 12 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லெஜன்ட் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரூபாய் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஒரே ஒரு பாடல் ஷூட்டுக்காக மட்டுமே 30 கோடி வரை செலவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 4days-collection-of-the-legend

4days-collection-of-the-legend