தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருந்த சர்தார் திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது.
இதே தினத்தில் இந்த படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவான பிரின்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் நான்கு நாள் முடிவில் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நான்கு நாள் முடிவில் 34 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைவதால் இதன் பின் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

4-days-collection-of-sardar-and-prince movie