தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் எத பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி நான்கு முக்கிய பிரபலங்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆமாம் நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா என நான்கு பேரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
