Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

2nd days box office collection of ponniyin selvan

இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மணிரத்தினம் பலர் இயக்க முயற்சி செய்து முடியாமல் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரவேற்பு கிடைத்து வந்தாலும் சில இடங்களில் எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளில் படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டு நாள் முடிவில் ரூபாய் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வசூல் வேட்டையாடி வரும் இந்த படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். இன்று முதல் தொடர் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2nd days box office collection of ponniyin selvan
2nd days box office collection of ponniyin selvan