Mafia Press Meet
துருவங்கள் 16 படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாஃபியா’. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் அவரது ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
அதன்பின் நடிகர் அருண் விஜய் பேசும்போது, ‘25 வருடம் சினிமாவில், பத்திரிக்கையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”.
இயக்குனர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் என்பதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுக்க லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள்.
பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். தமிழ் பேசும் அழகான ஹீரோயின் பிரியா பவானி சங்கர்’ என்றார்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…