தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி நயன்தாரா பிரியாமணி உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் நேற்று கலெக்சன் 75 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
இந்தியில் 65 கோடி ரூபாய், தமிழில் 5 கோடி தெலுங்குவில் ஐந்து கோடி என மொத்தம் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
