Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

14th-week-elimination-final-voting-analysis update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களில் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கும் இருவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மிக மிக குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் மாயா இருக்கிறார். அதற்கு அடுத்தபடியான இடத்தில் விஜய் வர்மா இருக்கிறார். ஆகையால் இவர்களில் ஒருவரே வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி மாயா தான் பிக் பாஸ் சீசன் 7-ன் ரன்னர் அப், அதுதான் சேனலின் பிளான் எனவும் இன்னொரு தகவல் ஒன்று பரவி வரும் நிலையில் இந்த வாரம் மாயா காப்பாற்றப்பட்டால் ஒருவேளை பரவி வரும் தகவல் உண்மையாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

14th-week-elimination-final-voting-analysis update
14th-week-elimination-final-voting-analysis update