Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் படத்தின் பாடல் படைத்த சாதனை..வைரலாகும் வீடியோ

1-million-views-of-dhanush movie song

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான “தாய் கிழவி” பாடல் ஜூன் 24ஆம் தேதி இணையத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மேகம் கருக்குதா” என்ற பாடல் அனிருத் இசையில் தனுஷ் எழுதி, பாடிய பாடல் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் அப்பாடல் இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.