விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. ஆர்யா அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது.
அது மட்டுமின்றி தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சினிமா துறை முடங்கியுள்ளது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு பிரீ புரடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறியுள்ளனர்.
????✌???? #IndruNetruNaalai2 #Karunakaran @Ravikumar_Dir @spkarthikid @GhibranOfficial @dineshkrishnanb
🙂 https://t.co/PbskgjmOYb pic.twitter.com/CjG1lgnjcP— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) April 17, 2020

