Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

For Vijay's last film 'Jananayakan', his first film 'Nalaya Thirup'..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது,

‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். இதெல்லாம் அரசியல் விளையாட்டு, இதை விஜய் தான் தனி ஆளாகப் போராடி வெற்றிபெற வேண்டும், தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகன் படம் வெளியாகாதது தயாரிப்பாளருக்கு தான் ரொம்ப கஷ்டம். ஹீரோவை விட தயாரிப்பாளருக்கு தான் அவஸ்தை அதிகம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்க வேண்டும்’ என வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. ‘நாளைய தீர்ப்பு’ விஜய் நடித்த முதல் படமாகும். இச்சூழலில் ஜனநாயகன் பட ‘நாளைய தீர்ப்பு’ முக்கியத்துவம் பெறுகிறது.

For Vijay's last film 'Jananayakan', his first film 'Nalaya Thirup'..
For Vijay’s last film ‘Jananayakan’, his first film ‘Nalaya Thirup’..