Master
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் இப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இன்று வெளியாகவில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் வரவில்லை என்றால், மாஸ்டர் படம் இன்று வெளியாகியிருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வந்தார்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, ”உங்களை போல, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம், சீக்கிரமே கொரோனா வைரஸூக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைன்ட் கண்டுபிடிக்கட்டும், விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா” என பதிவிட்டுள்ளனர். படக்குழுவிடம் இருந்து வந்த இந்த பதிவால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…