simbu and yuvan
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநாடு படம் பற்றி சிம்பு அளித்த பேட்டியில் கூறியதாவது: “முதல்முறையாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முஸ்லிம்களை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை சிலர் வைத்தபோது அது எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால்வாசி பேர் முஸ்லிம்கள்தான். பெரியார் பாடலும் பாடுகிறேன், சபரிமலைக்கும் செல்கிறேன், முஸ்லிம் பெயரிலும் நடிக்கிறேன் என்று சிலருக்கு குழப்பம் ஏற்படக்கூடும்.
எல்லாரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதைவிட முதலில் மனிதனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு பெரியாரிடம் பிடித்த விஷயங்களையும் வெளியில் சொல்வேன், எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் சபரிமலைக்கும் செல்வேன். மற்ற மதத்தை சேர்ந்து மக்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கும்போது அதற்கு குரல் கொடுப்பதற்காக முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்கு இந்த படத்தில் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…