master
விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் கடந்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது. இந்த நிலையில், ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதேபோல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படமும் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்ட போது, “மாஸ்டர் படம் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என்பது வெறும் வதந்தி. சந்தர்ப்பம் பார்த்து யாரோ வதந்தியை பரப்புகிறார்கள். பல கோடி செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும். இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகாது” என்று அவர் கூறினார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…