trisha and gautham menon
சிம்பு – திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,திரிஷாவுக்கு மொபைல் மேகராவை எப்படி கையாள்வது என்பது குறித்து கவுதம் மேனன் வீடியோ காலில் கற்றுக்கொடுக்கிறார். என்ன ஒரு ஜாலியான காலைப்பொழுது. நாங்கள் என்ன படம் பிடித்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன். நன்றி கவுதம் மேனன், என திரிஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்முலம், திரிஷாவும் கவுதம் மேனனும் இணைந்து குறும்படம் ஒன்றை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…