Akshay Kumar
கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய்குமார், பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.
தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது. நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…