actor prasanna
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். இந்த காட்சிக்கு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.
துல்கர் சல்மான் இந்தக் கடிதத்தை வெளியிட்டு, இதற்காக தனது குடும்பத்தினரையும் யாரும் இந்த அளவுக்குத் திட்டியிருக்க வேண்டாம் என்ற வருத்தத்தையும் பதிவு செய்தார். இதற்கு பிரசன்னா துல்கருக்கு ஆறுதல் தெரிவித்து, மேலும் மன்னிப்பு கோரியிருந்தார்.
பிரசன்னாவின் இந்தக் கருத்தை வைத்து பலரும் அவரையும் திட்டத் தொடங்கினார்கள். ஆனால், பிரசன்னா இதற்குப் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். இதை வைத்துப் பலரும் பிரசன்னா ட்விட்டர் தளத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனக் கூறினர்.
இது தொடர்பாக பிரசன்னா கூறும் போது, “யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…