நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். ஆனால் இவர் இந்த இடத்தை பிடிக்க, தனது கடின உழைப்பினால் மட்டுமே சாத்தியமானது.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றி பிறகு மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ளதால், ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் 70 சதவித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது வரை அப்டேட் ஏதும் வரவில்லை.
இந்நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மன், நடிகர் அஜித்தின் ரசிகர்களை குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து கூறுகையில் “மற்ற நடிகர்களின் ரசிகர்களை காட்டிலும், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வித்தியசமானவர்கள். ஏனென்றால் அவருக்கு ரசிகர் மன்றம் ஏதுமில்லை, அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதும் கிடையாது.
ஆனாலும் அவருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்” என் கூறியுள்ளார்.
