samantha
சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் ‘டாட்டூ’ போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று. விதவிதமான எழுத்துக்கள், டிசைன்களில் அந்த டாட்டூக்கள் இருக்கும். நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, அவருடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.
பல லட்சம் பேர் அதற்கு லைக் கொடுப்பார்கள். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ என்ன என்பதுதான் கடந்த சில நாட்களாக பரபரப்பானது.
அது அவருடைய கணவர் நாக சைதன்யாவில் செல்லப் பெயரான ‘சாய்’ என்பதின் ஆங்கில கையெழுத்து டாட்டூ என கண்டுபிடித்துவிட்டார்கள் ரசிகர்கள். இது நாள் வரை அந்த டாட்டூவை சமந்தா மறைத்து வைத்திருந்தார். கடந்த வருடம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் கூட அது சரியாகத் தெரியாமல் இருந்தது. தற்போது அந்த டாட்டூ தெளிவாகத் தெரியும்படி இருக்கிறது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…