“காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ”…. ஆட்டோகிராப் வாங்கி போலீசாரை நெகிழ வைத்த சூரி

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பாராமல் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் சூப்பர் ஹீரோவாக செயல்படும் காவலர்களை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று பாராட்டியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா என்கிற கொடூரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகிறார்கள். நடமாடும் தெய்வமாக, காக்கி சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள்.

இன்று காவல்துறையினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 50 பேருக்கு மேல் பதித்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள். தன்னலமின்றி செயல்படும் இவர்கள் தான் ரியல் ஹீரோ. வழக்கமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவோம். ஆனால் எனக்கு இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கணும்னு தோணுச்சு. இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என கூறினார்.

Soori
Suresh

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

24 minutes ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

33 minutes ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

40 minutes ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

1 hour ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

1 hour ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

18 hours ago