தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லிய விதம் மிகவும் பிடித்திருந்தது.
அதேபோல் இந்த கதாபாத்திரமும் என்னை கவர்ந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…