Shriya Saran
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க, ரஷ்யாவில் இருந்து மும்பை வந்துள்ள ஸ்ரேயா, ‘எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது, எனது கணவர் வீட்டில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார்.
என் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிம்பிளானது. அதை மறைக்க தேவையில்லை. பல்வேறு நாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தாலும் மும்பைக்கு வந்துவிடுகிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. இந்தியாவை விட்டு விட எனக்கு விருப்பமில்லை. இப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துவருகிறேன்.
இந்தியில், நயா நயா லவ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இதில் அக்ஷய் கண்ணா, பிரியங்கா சர்மா நடிக்கின்றனர். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன்’ என்றார்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…