thala ajith
தமிழ் சினிமாவில் தல அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதில் குறிப்பாக விஸ்வாசம் படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார், இவர் அஜித்துடன் இணைந்து கொடுத்த 4வது படம் இது.
இந்த கூட்டணி வேற்றியே கொடுத்திருந்தாலும், சில வருடங்களுக்கு இணைந்து படம் பண்ண வேண்டாம் என்று ரசிகர்களே நினைத்து வருகின்றனர்.
ஆனால், விஸ்வாசம் முடியும் போதே அஜித், சிவாவிடம் ”மறுபடியும் எப்போது படம் பண்ணலாம் சொல்லுங்கள்” என்றாராம்.
அதற்கு சிவா, “ஏன் சார் உங்களுக்கு போட் அடிக்கவே இல்லையா?” என்று கேட்க, அதற்கு அஜித் “ஏன் சார் உங்களுக்கு என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சுருச்சா?” என்று செம்ம கிண்டலுடன் கேட்டாராம்.
இதை கேட்டவுடன் அருகில் இருந்த தம்பி ராமையா கூட விழுந்து விழுந்து சிரித்தாராம், இந்த தகவலை சிவாவே கடந்த வருடம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
விவேகத்திற்கு பிறகு தான் இந்த கூட்டணி மீதி ரசிகர்களுக்கே அதிருப்தி வந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…