Categories: Movie Reviews

அருவம் திரை விமர்சனம்

நடிப்பு – சித்தார்த், கேத்தரின் தெரேசா.கபீர்சிங். மதுசூதன்
சதிஷ். ஆடுகளம் நரேன். மனோபாலா. மயில் சாமி சில்வா மாஸ்டர் மற்றும் பலர்

தயாரிப்பு – டிரைடன்ட் ஆர்ட்ஸ்

இயக்கம் – சாய் ஷேகர்

இசை – ஏஸ் ஏஸ் தமன்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one

வெளியான தேதி – 11 அக்டோபர் 2019

ரேட்டிங் – 2.5/5

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகள் கலப்படங்களை சுட்டிக்காட்டும் விதமாக
சமூக அக்கறையுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் அன்றாடம் சாப்பிடும் உணவில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ கலப்படங்கள் இருக்கின்றன. அது பற்றி எல்லாம் தெரிந்த கொள்ள முடியாமலே அவற்றை நாம் சாப்பிட்டு வருகிறோம்.

இயற்கையாக விளையும் பழங்கள், பால், மற்ற அனைத்து விதமான உணவுப் பொருட்கள் என அனைத்திலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. அவற்றைக் கண்டுபிடித்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரவும், அவற்றைத் தடுக்கவும் அரசாங்கத்திலேயே சில துறைகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே சரியாக செயல்படுகிறார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். லஞ்சத்தை வாங்கிக்கொண்டு விட்டுவிடுகிறார்கள்.அரசு அதிகாரிகள்

அப்படி உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் சாய் ஷேகர் ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம் சொல்ல வந்த விஷயத்தை படத்தின் மையக் கருவை உடனே சொல்லாமல் என்னென்னமோ சொல்லிவிட்டு பின்னர்தான் கதைக்கே வருகிறார். அதையும் தாண்டி இது ஒரு பேய்ப் படமாகக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

Food Safety Asst.. commissioner ஆக வருகிறார் சித்தார்த். தமிழகத்தில் உள்ள பல உணவு மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை களைகிறார் கதாநாயகன் சித்தார்த். அந்நிறுவனங்களுக்கு சீலும் வைக்கிறார்.

கவர்மெண்ட் ஸ்கூலில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார் கதாநாயகி கேத்தரின் தெரேசா. வாசனையோ, நாற்றமோ அதை நுகரும் சக்தி அவருக்கு இல்லை.

எந்த ஜீவனுக்கும் எந்த துன்பத்தையும் இழைக்கக் கூடாது என்ற மனப்பாங்கோடு சமூக சேவை ஒன்றை குறிக்கோளாக வைத்துக் கொண்டு இயலாதவர்கள் பலருக்கு தன்னால் இயன்ற சேவையை செய்து வருகிறார் கதாநாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு உணர்வு திறன் இல்லாததால், எந்த மணத்தையும் இவரால் உணர முடியாது.

பார்த்த முதல் பார்வையிலேயே அவரைக் காதலிக்கிறார் கதாநாயகன் சித்தார்த். உணவுப் பாதுகாப்புத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். முதலில் கதாநாயகன் சித்தார்த்தின் காதலை மறுக்கும் கதாநாயகி கேத்தரின் தெரேசா.

பின்னர் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் சிறு விபத்தில் சிக்குகிறார் கதாநாயகி கேத்தரின் தெரேசா.. மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு நுகரும் சக்தி திடீரென வருகிறது. அதற்கடுத்து மத்திய அமைச்சர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் கொல்லப்படுகிறார்கள்.

அவர்களைக் கொன்றது கேத்தரின் தெரேசா தான். என மத்திய அமைச்சரின் தம்பி கண்டுபிடித்து கேத்தரின் தெரேசாவை. கொல்லத் துடிக்கிறார்.

உருவமாக வந்து கேத்ரினோடு வாழ நினைத்த கதாநாயகன் சித்தார்த், அருவமாக மாறி கேத்ரின் உடலுக்குள் ஆவியாக சென்று வில்லன்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான்
அதன்பின் என்ன நடக்கிறது கேத்தரின் தெரேசாவை கொன்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

காதல் கதையாக ஆரம்பித்து, சமூகக் கதையாக மாறி, பேய்க் கதையாக டிவிஸ்ட் அடித்து பழி வாங்கும் கதையாக முடிவுக்கு வந்து இரண்டாவது பாகத்திற்கும்  ஆரம்பம் போட்டு முடிகிறது படம். ஒரு நல்ல ஆக்ஷன் படத்துக்குரிய கதையை பேய்ப் படமாக மாற்றியதால் அதன் சுவாரசியம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

கதாநாயகன் சித்தார்த், உணவுப் பொருட்கள் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக நடந்து கொள்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வேலை சார்ந்த காட்சிகள் படத்தில் வருகின்றன. டீ, தண்ணீர், மருந்து, பால், பருப்பு ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. கதாநாயகன் சித்தார்த்தின் நேர்மையும், நடவடிக்கையும் அவருக்குப் பொருத்தமாக உள்ளன. கண்டிப்பான அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருக்கிறார் கதாநாயகன் சித்தார்த்.

கவர்மெண்ட் ஸ்கூலில் ஆசிரியை ஆக கதாநாயகி கேத்தரின் தெரேசா. கவர்மெண்ட் ஸ்கூலில்  ஆசிரியைகள் புடவை மட்டும்தான் அணிய வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகி கேத்தரின் தெரேசா. சுடிதார் உள்ளிட்ட மற்ற ஆடைகளை அணிந்து வருகிறார். சமூக சேவைகளில் சிறந்த ஆர்வம் கொண்ட கதாநாயகி கேத்தரின் தெரேசா. என்பதை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது. ஜோசியம் பார்க்க கிளியை வைத்து பிழைப்பு நடத்துபவரிடம் சென்று இந்தக் கதாநாயகிகள் வீரம் காட்டுகிறார்கள். அது போல நாயை சங்கிலியில் பிணைத்து வீட்டில் வளர்க்கும் எத்தனையோ ஆயிரம் பேரிடம் சென்று அப்படி வீரம் காட்டுவதில்லை. சுதந்திரமாகத் திரிய கிளிகளுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதா, நாய்களுக்கு இல்லையா ?. கதாநாயகி கேத்தரின் தெரேசாவின். முகபாவத்திற்கும் அவருடைய பின்னணி குரலுக்கும் பொருத்தமில்லாமல் தெரிகிறது. முடிந்தவரை தன் கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருக்கிறார் கதாநாயகி கேத்தரின் தெரேசா..

இந்த படத்தில் மெயின் வில்லனாக கபீர் சிங். பல படங்களில் பார்த்த அதே மாதிரியான வில்லன். மகளிடம் தோழமையாகப் பழகும் அப்பாவாக ஆடுகளம் நரேன். அருமை கதாநாயகன் சித்தார்த்தின் நண்பராக சதீஷ் சில காட்சிகளில். மட்டுமே வருகிறார்.

தமனின் பின்னணி இசை பரவாயில்லை. ஆனால் படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒரு முழுமையான டூயட் பாடலையாவது வைத்திருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிந்த திரைக்கதை இந்தபடத்தின் மைனஸ் ஆக அமைந்துள்ளது.  பேய்ப் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என பார்த்துப் எல்லோருக்கும் பழகிவிட்டது. நல்ல கருத்தை எடுத்துக் கொண்டு தடம் மாறிவிட்டார். இயக்குனர்  சாய் ஷேகர்   கதாநாயகன் சித்தார்த் தான் அருவம் என்ற டிவிஸ்ட்டை மட்டுமே இடைவேளை வரை காப்பாற்றியிருக்கிறார். கதாநாயகன் சித்தார்த்

அருவம் – மனதை  தொடவில்லை

admin

Recent Posts

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…

7 hours ago

மதராசி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

7 hours ago

மதராசியில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

8 hours ago

கிரிஷ் விஷயத்தில் முத்து எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…

10 hours ago

நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…

23 hours ago