நடிப்பு – வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு
மற்றும் பலர்
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – நட்டு தேவ்
இசை – தரண்குமார்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one
வெளியான தேதி – 11 அக்டோபர் 2019
ரேட்டிங் – 2.5/5
காலேஜ் ஸ்டூடண்ட்கலை இளம் ரசிகர்களையும் மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான். பப்பி அதற்காகவே இயக்குனர் நட்டு தேவ் என டைட்டிலில் கூட பெயர் போடாமல் முரட்டு சிங்கிள் என வைத்து ரசிகர்களை ஈர்க்கப் பார்த்திருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு அவர்களது தடுமாற்றமான வயதில் வரும் ஆசையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ்.
மற்றபடி படத்தில் வேறு எந்த டிவிஸ்ட்டும் கிடையாது. அதை வைத்தே இரண்டு மணி நேரம் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். யோகிபாபு படம் முழுவதும் இருப்பதால் அவற்றை மறந்து ரசிக்க முடிகிறது.
இஞ்சினியரிங் நான்காம் ஆண்டு படிப்பவர் கதாநாயகன் வருண். வகுப்பறையில் பிட்டு படம் பார்த்ததால் கல்லூரியை விட்டு ஆறு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
கதாநாயகன் வருண் வீட்டு மாடிக்கு கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே குடும்பம் புதியதாக வாடகைக்கு வருகிறார்கள். கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே,வை பார்த்ததும் நட்பாகி, அவருடன் ஒரே பாடலில் நெருக்கமாகி விடுகிறார் கதாநாயகன் வருண். இருவரும் தங்களுக்குள் காதல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
நண்பனின் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவர்களது
திருமணத்திற்கு முன்பே ஓர் இரவில் இருவரும் இணைந்து விடுகிறார்கள். அதனால் கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே, கர்ப்பம் அடைகிறார். அதை கலைக்கச் சொல்கிறார் கதாநாயகன் வருண், ஆனால், கர்ப்பத்தை காப்பாற்ற நினைக்கிறார் கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே,. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் கதாநாயகன் வருண் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிய வைத்து விடுகிறார் இயக்குனர். நட்டு தேவ் பெண்களிடம் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று துடிப்பவர்தான் கதாநாயகன் வருண். ஆனால், அப்பாவைக் கண்டாலே பயந்து நடுங்குபவர். அப்படிப்பட்டவர் சம்யுக்தா ஹெக்டேவிடம் நெருங்கிப் பழகி அவருடைய ஆசையையும் தீர்த்துக் கொள்கிறார்.
அந்த வயது இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தன் நடிப்பில் தெளிவாகவே காட்டியிருக்கிறார் கதாநாயகன் வருண். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு கதாநாயகனாக முதல் படம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று நினைத்தது ஏன் என்று தெரியவில்லை. நல்ல படத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்காத ஏன்
கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே தாய் தந்தையுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து குடியேறினார்கள். மதுரைப் பெண்ணாக இருந்தாலும் கதாநாயகன் வருணுடன் உடனேயே அவர்கள் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை. கதாநாயகன் வருண் கேட்டதுமே இவரும் தன்னைக் கொடுக்க சம்மதிப்பதெல்லாம் இந்த படத்தில் கொஞ்சம் அதிகம் தான். ஆரம்பத்திலேயே கதாநாயகன் வருண் கதாபாத்திரத்தைப் புரிய வைத்தது போல கதாநாயகி சம்யுக்தா ஹெக்டேவின் கதாபாத்திரத்தையும் அப்படி ஆசைக்கு ஏங்குபவர் எனச் சொல்லியிருந்தால் நம்பி இருக்கலாம்.
நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகனாக இணைந்து காப்பாற்றிய யோகி பாபு, இந்தப் படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக இருந்து இந்த படத்தை காப்பாற்றுகிறார். அடிக்கடி சிரிக்க வைப்பவர் ஒரு காட்சியில் அழவும் வைக்கிறார்.
கதாநாயகன் வருணுக்கு தாய்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைக்கும் பப்பி ஆக நாய் பிங்கி. கிளைமாக்ஸ் காட்சிகளில் அந்த ப்பபி கூட அருமையாக நடித்திருக்கிறது.
இசை தரண் குமார் இசையில் யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், நடிகர் ஆர்ஜே பாலாஜி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரைப் பாட வைத்து பாடல்களைப் பிரபலமாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை
இந்த பப்பி திரைபடத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகமாக இல்லை என்றாலும். ஆனாலும் பல ஆபாசம் அர்த்தங்கள் உள்ள இரட்டை வசனங்கள் இடம் பெற்றதை சென்சாரில் கட் செய்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் இஞ்சினியரிங் காலேஜில் படிக்கும் இளைஞர்கள் கூட இப்படி இருக்கிறார்கள் என்ற சித்தரிப்பு கவலைப்பட வைக்கிறது
மிக ஜாலியான கதை என்ற பெயரில் சில தரக்குறைவான காட்சிகளை வைத்துவிட்டு, கடைசியில் தாய்மை, பாசம், புரிதல் என பாடம் நடத்தி படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குனர் நட்டு தேவ்
பப்பி – இயக்குனரின் வயசுக் கோளாறு
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash
Broke Boy Video Song | Love Oh Love | Pavish Narayan | Naga Durga |…
Heartin Official Trailer | Sananth | Madonna Sebastian | Emaya T | Rajesh Murugesan |…