darbar
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தர்பார் திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…