அந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் – ஜிவி பிரகாஷ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் யூடியூபில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.

அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், “இந்த ஸ்டுடியோவில் தான் நானும் செல்வராகவன் அவர்களும் எத்தனையோ நாட்கள் தூங்காமல் வேலை செய்தோம். அந்தப் படம் வெளியான போது பாராட்டுகளோ, விருதோ கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது சந்தோஷமாக உள்ளது. அப்போது இந்த பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருந்தால் இன்னும் எனர்ஜியாக இருந்திருக்கும். உடனே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ செய்திருப்போம்.

அந்த சமயத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் முதல் பாதி நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது. அப்போது முதல் பாதி முதல் பாகமாகவும், 2-ம் பாதி 2-ம் பாகமாக வெளியிடலாமா என்று செல்வராகவன் என்னிடம் பேசினார். இறுதியில் ஒரே பாகமாக வெளியிடலாம் என்று திட்டமிட்டு வெளியிட்டோம்.

அந்தச் சமயத்தில் 2 பாகங்களாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் அடுத்ததடுத்து 3 மற்றும் 4-ம் பாகங்கள் உருவாகியிருக்கும். அது ஒரு சீரியஸாக இருந்திருக்கும். செல்வராகவனுடன் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம். அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமையாக நினைக்கிறேன்” என கூறினார்.

Suresh

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

18 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

21 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

21 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

23 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

23 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

23 hours ago