நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. படத்தின் பெயர் மட்டுமே இதுவரை ரசிகர்களுக்கு கிடைத்த தகவல். இளம் இயக்குனர் வினோத் இப்படத்தை மிகவும் தெளிவாக பிளான் செய்து இயக்கி வருகிறார்.
இதுவரை படத்தின் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.
இந்த நிலையில் தான் ஒரு அப்டேட். அதாவது அஜித்தின் வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் 30 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.
அங்கும் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு படத்தின் பைக், கார் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.

