‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஸ்வதீஸ் எம்.எஸ் இயக்க உள்ளார். தர்ம பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

Suresh

Recent Posts

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

3 hours ago

“தேர்தலுக்கு முன் கூறிய விமர்சனங்களுக்கு வருந்துகிறேன்” – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சேரன்

தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…

3 hours ago

ரசிகர்களை கவரும் “காவிய காதல்” டைட்டில் அறிவிப்பு வீடியோ!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில்…

3 hours ago

ராம் சரண் நடித்த “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணி நிறைவு!

தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக…

3 hours ago

மே 22 முதல் ZEE5-ல் வெளியாகும் “வாரண்ட்” தொடர்!

“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே…

3 hours ago

29 Official Trailer

29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar | Kaarthikeyan…

6 hours ago