Yogalakshmi Confirms Role in Upcoming Arasan
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரமியா, அமீர், கிஷோர், விக்ராந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘ஹார்ட் பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை யோகலட்சுமி, ‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய யோகலட்சுமி, “நான் சிம்பு சாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவருடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்தப் புகைப்படத்தை முதலில் என் அம்மாவிடம் காட்டினேன். அதைப் பார்த்தவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த தருணத்தில் என்ன பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் யோகலட்சுமிக்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிம்புவுடன் திரையை பகிர்ந்து கொள்வது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவரது இந்த மகிழ்ச்சியான பகிர்வு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…