Yashika Anand join with Jeevan in Pambattam
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’.
நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
முக்கியமான இளவரசி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20 க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இனியன் ஜே ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார்.
1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…