மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி.

முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி.

பின்னர், தியாகராஜன் குமாரராஜா எந்தவொரு படத்தையும் இயக்காமல் உள்ளார். தற்போது தனது அடுத்த படத்துக்காக தயாராகி வருகிறார். இதில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் முடிவாகிவிடும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஆகையால் அவரது இயக்கத்தில் குறுகிய காலத்தில் உருவான படமாக இது இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

Will the ‘Super Deluxe’ alliance reunite?
dinesh kumar

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago