What kind of story is Madrasi Movie AR Murugadoss Open Speech.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும்,ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் பிசியாக தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்.
அவரின் பிறந்த நாளான நேற்று மதராஸி என்ற டைட்டிலை படக்குழு அறிவித்து இருந்தது. தற்போது இந்த படத்தின் இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் இந்த படம் குறித்து பேசி உள்ளார். அதாவது தற்போது சிவா ஆக்சன் கதையம்சம் கொண்ட படங்கள் நடித்து வருகிறார். அதனால் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக அழைத்து செல்லும்.
இது மட்டும் இல்லாமல் இந்த படம் வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து கதைக்களம் இருக்கும். வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் வார்த்தைதான் இந்த படத்தின் டைட்டில் மதராஸி அதனால்தான் படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.
FRIDAY - Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh ,…
Galatta Family Trailer , Vimal , Anicka Vickram , Thambi Ramaiya , Mottai Rajendran ,A.Sarkunam…
Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar |…
Dashamakan - Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael https://www.youtube.com/watch?v=0fs_1ampVWw…
Anjaan - Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy …
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC…