“கலை மற்றும் சினிமாவை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” கார்த்திக் சுப்பராஜ்

“கலை மற்றும் சினிமாவை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” கார்த்திக் சுப்பராஜ்

சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்..

‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில்,

‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் போகிறது.

நாளை வெளியாகவிருக்கும் மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ’பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

சுயாதீன மற்றும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் அதிக ஆதரவளிக்க வேண்டும். ஏனென்றால், பெரிய டிவி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கான ஒரே ஆதாரமாக திரையரங்குகள் மட்டுமே உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்காமல் இருப்பது, சினிமாவை அழிப்பதற்கு சமம்.

பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை. இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான கடுமையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. இது குறிப்பாக, வெளியீட்டுத் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கும்போது, படத் தயாரிப்பாளர்களின் படைப்புச் சுதந்திரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான தற்போதைய காலக்கெடு விதிகளின்படி, ஒரு படம் முழுமையாக முடிக்கப்படுவதற்கு வெளியீட்டுத் தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

இது பல காரணங்களால் சாத்தியமற்றது. இது சீரமைக்கப்பட்டு, படத் தயாரிப்பாளர்களுக்குச் சற்று எளிதாக்கப்பட வேண்டும். இது தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என அனைவராலும் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் தள்ளிப்போவது இறுதியில் இந்தத் துறையையே அழித்துவிடும்.

திரைத்துறையினரே, நாம் அனைவரும் ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட நோக்கங்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கலையைக் காப்பாற்ற, சினிமாவை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய ஒன்றிணைவோம்’ என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

“We must work together to save art and cinema” Karthik Subbaraj
dinesh kumar

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

20 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

20 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

3 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

3 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

3 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

3 days ago