We arrested Chitra's husband because of the evidence - police said
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார்.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவு திருமணமும் நடைபெற்றது.
நாடகத்தில் நடித்து வந்த சித்ரா நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்த போதுதான் ஹேம்நாத்துக்கு சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் அது போன்று நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று சித்ராவிடம் ஹேம்நாத் கூறி சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட சித்ரா ஹேம்நாத்தின் தந்தையிடம், ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தும் விஷயத்தை செல்போனில் கூறி வந்துள்ளார். அந்த ஆடியோ பதிவு அழிந்துள்ளதாகவும் அதனை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தபோதுதான் தகவல் வெளியானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செல்போன் ஆதார அடிப்படையிலேயே ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…