vishnu-vishal-latest-update-viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்ட குஸ்தி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக இப்படத்தில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் இதனை செலிப்ரேட் செய்யும் வகையில் தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் அத்துடன் இணைத்து பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…