ரன்வீர் சிங்கை தொடர்ந்து அரை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்ட விஷ்ணு விஷால்.. விமர்சிக்கும் ரசிகர்கள்

வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி இருந்தார். தற்போது விஷ்ணு விஷால் ‘மோகன் தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்திற்கு திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரன்வீர் சிங் பாணியில் நடிகர் விஷ்ணு விஷால் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷால் மெத்தையில் அரை நிர்வாணமாக இடுப்புப் பகுதிக்கு கீழே வெள்ளை போர்வையை போர்த்தியபடி இருக்கிறார். மேலும், “நானும் டிரெண்டில் இணைகிறேன். புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

18 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

18 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago