விமானம் திரை விமர்சனம்

பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் கால்களை இழந்த தகப்பனாக தனது மகன் துருவனை வளர்த்து வருகிறார் சமுத்திரகனி. துருவன் எப்படியாவது ஒரு பைலட்டாக்கி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான்.ஆனால் துருவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. துருவன் சில காலமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது மகன் இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று சமுத்திரகனி நினைக்கிறார். ஏழைக்குடும்பத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரகனி தனது மகனின் ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். மகனுக்காக சிறுசிறு வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்க்க முயற்சிக்கிறார். இதனிடையே சமூத்திரகனியின் வாழ்க்கையில் பல பிரச்சினை குறுக்கே வருகிறது. இறுதியில் தனது மகனின் ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? குழந்தையின் கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. கால்களை இழந்த ஏழை தந்தையாக சமுத்திரகனி அற்புதமாக நடித்துள்ளார்.

தனது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும் இடங்களில் கண்கலங்க வைத்துள்ளார். குழந்தையாக நடித்திருக்கும் துருவன் நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். படத்தில் தோன்றும் மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது. மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா. தந்தைபடும் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு அவருக்காக தனது ஆசையை கைவிட நினைக்கும் இடங்களை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். கதையில் விறுவிறுப்பு இல்லாததால் சற்று சோர்வு ஏற்படுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு அவருடைய பணியை சரியாக செய்துள்ளார். சரண் அர்ஜுனின் இசை ஓகே. மொத்தத்தில் விமானம் – அதிகம் பறக்கவில்லை.


vimanam movie review
jothika lakshu

Recent Posts

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

9 hours ago

Kasivu Movie Press Meet | MS.Bhaskar | Kayal Patti Vijayalakshmi

https://youtu.be/SPNqvVR15cQ?t=1

9 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

10 hours ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

10 hours ago

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

10 hours ago