village-cooking-channel latest speech-goes-viral
யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர். இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது முன்னிலையில் இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமயலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.இந்நிலையில், ‘விக்ரம்’ படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்று வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு தெரிவித்துள்ளது.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இந்த குழு, \”இந்த சேனல் ஆரம்பிக்கும் முன்பே கன்டன்-யை தாண்டி எதுவும் செய்ய கூடாது என்று முடிவு செய்துவிட்டோம். விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட ஒரு பைசா வாங்கவில்லை. எவ்வளவு ஆஃபர் வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளோம். ஏன் ஸ்பான்சர்சிப் கன்டன் செய்யவில்லை என்றால் ஒருவரிடம் நாம் பணம் வாங்கிக் கொண்டோம் என்றால் அவர்களுக்காக வேலை பார்க்க வேண்டும். அவங்களுக்கு என்று நம் வீடியோவில் நேரம் ஒதுக்க வேண்டும். அது எங்களுக்கு சரியாகப்படவில்லை என்றதால் இவ்வாறு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் பணத்தின் மேல் ஆசை வரக்கூடாது. யூடியூபில் இருந்து வரும் வருமானம் போதும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கிறோம்\” என்று கூறினார்.”,
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…