vijayakanth-death-sivakarthikeyan-pens-emotional tweet
“தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துரையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜயகாந்த்-க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.., \”தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.
எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…